Home > Be Born Again

Be Born Again

மறுபிறப்பு, ஜீவசமாதி மற்றும் மோட்சம்
இவைபற்றிப் பேசுங்கள், செயல்படுங்கள் வெற்றியடையுங்கள்.

காயகற்பம், நித்திய பேரானந்தம், ஜீவசமாதி முதலியவற்றில் ஆர்வமும், தேடலும், ஈடுபாடும் கொண்டவர்கள் மட்டும் படிக்க, தொடர்க, பயன்பெறுக.

இனிப்பான ஓர் இடத்தில் இருந்து, ஒரே வீட்டில் இருந்து இருவர் புறப்பட்டனர்.

ஒருவர் வடக்கே செல்லவும் இன்னொருவர் தெற்கே செல்லவும் பணிக்கப்பட்டிருந்தனர் . வடக்கே சென்றவர் இலையாகி , தண்டாகி, செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, கனிந்து தனது வேலைகளை முடித்தார்.

தெற்கே சென்றவர் ஆணிவேராகி, பக்கவேராகி, சல்லிவேராகி, வேர்த்தூவியாகி தனது கடமைகளை நிறைவேற்றினார்.

தெற்கே சென்றவர் சரியாக வேலை செய்திருக்காவிடில் வடக்கே சென்றவர் தன் வேலைகளை முழுமையாகச் செய்திருக்க முடியாது. வடக்கே சென்றவர் தன் பணிகளைச் சரியாக முடிக்காவிடில் தெற்கே சென்றவர் தன் பணிகளைச் சரியாகச் செய்து என்ன பயன்? இருவருக்குமே எண்ணிலடங்காத வேலைகள் உள்ளன என்பதுதான் உண்மை.

யாரும் எந்தத் தாவரத்திலும் தெற்கே செல்லும் பகுதிகளை அதிகமாகத் தேடிப் பார்ப்பதில்லை (உணவுக்கான கிழங்குகள் மற்றும் மருந்துக்கான வேர்களைத்தவிர).

சேறும் சகதியும், நாற்றமும் கலந்த கீழ்ப்பகுதியில் இருந்துதானே மனமும் வண்ணமும் கலந்த மலர்களும் சுவையும் பயனும் நிறைந்த கனிகளும் கிடைக்கின்றன.

சரி. இப்போது செய்திக்கு வருவோம்..

பரிணாமத்தின் அடிப்படையில் மனிதனின் உடல் தோற்றம் அனைவருக்கும் பொதுவானது ஒன்றானது . பிறப்பு கூட எல்லா உயிருக்கும் ஒன்று என்று ஞானியர்கள் சொல்லியுள்ளனர். ஆனால் சிறப்பும், இறப்பும் எல்லோருக்கும் ஒன்றாக இருக்காது என்றும் அதே ஞானியர்கள் சொல்லியுள்ளார்களே!

“மனிதன் வாழும்போது பெறும் பெரும் சிறப்பையும் இறப்பில் வித்தியாசத்தையும் காணவேண்டும் அல்லவா? அதற்குத்தான் ஞானம், யோகம் மற்றும் மதம் எல்லாம் தேவை” என்பதை முதலில் அறிவோம்.

பிறப்பு, வாழ்வு மற்றும் இறப்பு ஆகியவைகளில் சிறப்பைத்தராத ஞானம் ஞானமுமல்ல, யோகம் யோகமுமல்ல, மதம் மதமுமல்ல என்பதையும் அறிவோம்.

தான் பின்பற்றும் மதம் அல்லது யோகம் உயர்ந்தது என்றும், மற்றவன் பின்பற்றும் மதமும் யோகமும் தாழ்ந்தது என்றும் மார்தட்டிக்கொள்ளும் மானிடர்களே! ஏன் நீங்கள் நாறிச்சாகின்றீர்கள்? என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். (அமரர்களே! தேவர்களே! பொறுத்துக்கொள்ளுங்கள்.)

மறுபிறப்பு, ஜீவசமாதி மற்றும் மோட்சம் பற்றிப்பேசாத மதம் ஒன்று உண்டென்று யாரும் சொல்லமுடியாது. மறுபிறப்பு, ஜீவசமாதி மற்றும் மோட்சம் பற்றிபேசுங்கள், செயல்படுங்கள் வெற்றியடையுங்கள். அவ்வெற்றிக்குப்பின் நீங்கள் பின்பற்றும் மதம் அல்லது யோகம் உயர்ந்தது, மற்றவன் பின்பற்றும் மதமும் யோகமும் தாழ்ந்தது என்றும் மார்தட்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாரிசுகள் மற்றும் சந்ததிகள் அதைப்பற்றிப்பேசி மார்தட்டிக்கொள்ளட்டும், வெற்றியுமடையட்டும்.

ஏதோவொரு அரசியல் பொருளாதார நோக்கத்திற்காகவோ (கௌரவம் என்ற அகங்காரத்திற்காகவோ) மதம் அல்லது யோகம் பற்றிப்பேசி நீங்களும் வீணாகி உங்களைச் சேர்ந்தவர்களும் வீணாகிப்போகும்படி நடக்காதீர்கள். அவர்களைக்கெடுத்த பழியும் பாவமும் உங்களைச்சேராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

கௌரவம் கொண்ட அகங்காரம்

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ள நிலைகளைப் பற்றியறிய பல இருப்பினும், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ளதையும் நடப்பதையும் முதலில் அறிந்துகொள்ளுங்கள்.

மனிதன் பிறந்தபின் உயிர், உடல் , மனம் மற்றும் ஆன்மா ஆகிய நான்கு அருவுருவப்பொருட்கள் கொண்டவனாகின்றான். உயிரும் உடலும் இயங்கி, தங்கள் இயக்கத்தின் வழியாக, அவ்வியக்கத்திற்கேற்றவாறு முதலில் உருவான மனதை விரியச்செய்கின்றன.

உயிரின் துணையால் இயங்கிய உடல்தான் மனதின் இயக்கத்திற்கு முதலில் காரணம் ஆனது. நாளடைவில் மனமானது உடலைத்தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. மனம் சொல்லும்படியெல்லாம் உடல் இயங்கவேண்டிய கட்டாயம் உருவாகிவிடுகிறது. அதிலும் மனதின் மனம் சொல்லும்படி உடல் இயங்கினால்கூட நல்லதுதான். ஆனால் மனதின் அகங்காரம் சொல்லும்படி உடல் இயங்குவதுதான் வேதனையாக முடிகிறது.

இந்த அகங்காரம்தான் படைப்பின் மூலகாரணம். அதனால்தான் இது பிரம்மா என்றழைக்கப்படுகிறது. அனைத்துவித படைப்புகளுக்கும் அகங்காரமே காரணம்.

மனமே காக்கும் பணியைச்செய்வதால் அது விஷ்னு ஆகிறது.

மனதின் விருத்திகளில் (மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ) அகங்காரம் கீழ்நோக்கி வளர்வது. உடலையும் மனதையும் கீழ்நோக்கி (அழிவை நோக்கி) வளர்ப்பது. அகங்காரமானது சேறும் சகதியும், நாற்றமும் கலந்த கீழ்ப்பகுதியில் இருந்தாலும் தேவையானவற்றை மட்டும் உறிஞ்சி மேலே அனுப்பும் வேரைப்போல தேவையானவற்றை மட்டும் எடுத்து மனதின் மனவளர்ச்சிக்கும் ஜீவனுக்கும் பயன்படும் வகையில் அனுப்பினால் அந்த அகங்காரம் நல்லதும் தேவையான ஒன்றும் ஆகும்.

மனதின்மனம், மனதின்சித்தம், மனதின்புத்தி, மனதின்அகங்காரம் என்ற வரிசையில் மனதின் புத்தியிலும் மனதின் அகங்காரத்திலும்தான் மனிதன் அதிகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். மனதின் மனதை நோக்கிய பயணமும் மனதுக்கு முந்தைய ஜீவனை நோக்கிய பயணமும் தொடக்கி அகங்காரத்தை அளவோடு வைத்து வாழ்ந்தால் வெற்றி என்னும் ஜீவசமாதி நிச்சயம் கைவரவாகும்.

சேறும் சகதியும், நாற்றமும் கலந்த கீழ்ப்பகுதியில் இருந்துதானே வேர்களின் துணையால் மனமும் வண்ணமும் கலந்த மலர்களும் சுவையும் பயனும் நிறைந்த கனிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

கீழ்நோக்கி வளரும் வேரைப்போல அகங்காரமும் அளவோடு முறையாக வளர்ந்தால் காயகற்பம், நித்திய பேரானந்தம், ஜீவசமாதி முதலிய நற்கனிகள் உங்கள் கைவரவாகும்.

எனவே அகங்காரம் கொள்ளுங்கள். தேவையற்ற அகங்காரத்தை கொல்லுங்கள்.

நீங்கள் காயகற்பம், நித்திய பேரானந்தம், ஜீவசமாதி முதலிய நற்கனிகள் கொண்ட மரமாக வளர உங்களைச் சீடர்களாக்கி பயிரிடுபவர்தான் சத்குரு, மகரிஷி, பிரம்மரிஷி..

—– பிரம்மரிஷி பேரானந்த ஜெயதேவர்.

MaJey 002

     The “Amarar” – “Devar” – “God’s children” are first born as humans from the “Maanudayoni” (Physical womb of a human) and after that they are secondly born as “Amarar” – “Devar” – “God’s children” through the “Theivayoni” (Mental womb of a Guru). That means they are born again. They are born from the divine womb of an astral – subtle body.

     The source of creation of “Amarar” is in the mental – austral – subtle body (Sookkumam) and “Amarar”, “Devar” and “God’s children” who born from this are considered as sinless and sacred. Humans are the creation of the divine power but “Amarar”, “Devar” and “God’s children” are a part of it that easily merge with the divinity.

     Humans are related only to the physical body and they are living in the same. But “Amarar”, “Devar” and “God’s children” are related to the subtle body (Sookkumam and Kaaranam) and they are empowered to live wonderfully both in physical and subtle bodies.

     Even though “Amarar”, “Devar” and “God’s children” are having the same appearance as humans, there are many differences between the humans and “Amarar”, “Devar” and “God’s children”. They are not equal in any factor or level.

     All religions and mystics have witnessed about the second birth of the human as a basic and important step of the spiritual path to attain the eternal bliss, peace and life. Only the second birth is considered as sacred and it is also believed as the initiation for the spiritual growth in some religions.

End Contact