Home > News

News

மெய்யன்புடைய அனைவருக்கும்!
என் அன்பான இனிய “கிறிஸ்து பிறந்த நாள்” வாழ்த்துக்கள்.

“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளின் வழியில் செல்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்.

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப்பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

ஆகையால், துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும் பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார். பாவிகளின் வழியோ அழியும்”.
திருவிவிலியம் – சங்கீதம்: 1:1 – 6

நீதிமான்களின் சபை எங்கே இருக்கிறது என்றும் அதில் நிலைத்து நிற்பது எப்படி என்றும் அறிந்து, இறுதிவரை நிலைத்து நின்று மரணத்தை வெல்லுங்கள்.

“எமன் அணுகா சத்திய பரிசுத்தவான்களின் சபையில், எமன் கைவசப்பட்டு பிண நாற்றத் தீட்டுக்கு உரிய நரர் நிலைநிற்பதில்லை”.

“உன் கர்த்தராகிய கடவுளை உன் வாலிபப் பிராயத்தில் நினை”.

“உன் கர்த்தராகிய கடவுளை பரிசுத்த அலங்காரத்தோடே தொழுதுகொள்ளுங்கள்”.

“நாம் யாவரும் மரிக்க மாட்டோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது கண் இமைக்கும் நேரத்தில் நாம் மறு ரூபமாக்கப்படுவோம்”.

“அழிவுக்கேதுவான இந்த உடல் அழியாமையையும் சாவுக்கேதுவான இந்த உடல் சாவாமையையும் அணிந்து கொள்ளும்போது மரணம் முற்றிலுமாக விழுங்கப்பட்டது. சாவே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?”.

“இயேசுவை தன் திருக்குழந்தையாக தன் உள்ளத்தில் பிறக்கவைத்துக்கொள்ளும் மனிதர்கள் சாவை வென்று சமாதி அடைகிறார்கள். எமன் எனும் பொல்லாங்கன் அவர்களைத்தொடான்”.

மெய்யன்புடைய அனைவருக்கும் என் அன்பான இனிய “கிறிஸ்து பிறந்த நாள்” வாழ்த்துக்கள்.

——-பிரம்மரிஷி பேரானந்த ஜெயதேவர்.